Archives: ஆகஸ்ட் 2016

உண்மையான விடுதலை

ஒலௌடா யூக்கியானோ (1745–1796) 11 வயதாக இருந்தபொழுது கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்டான். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கும், வெர்ஜினியா காலனிக்கும், அங்கிருந்து இங்கிலாந்துக்குமான பயங்கரமான வேதனை நிறைந்த பயணத்தை மேற்கொண்டான். அவனது 20வது வயதில் பணம் கொடுத்து, அவன் தன் விடுதலையை வாங்கினான். மனிதாபிமானமற்ற முறையில் அவன் நடத்தப்பட்டிருந்ததினால் அவன் இன்னமும் உணர்ச்சிபூர்வமான, சரீரப்பிரகாரமான தழும்புகளை தாங்கிக் கொண்டிருந்தான்.

அவனுடன் சேர்ந்த மற்ற மக்கள் இன்னமும் அடிமைத்தனத்தில் இருந்ததால் அவன் பெற்ற விடுதலையின் நிமித்தம் அவன் மகிழ்ச்சியடைய இயலாமல், இங்கிலாந்தில் அடிமைத்தனத்தை ஒழிக்கும் இயக்கத்தில்…

சாந்தத்தோடு தாக்கத்தை ஏற்படுத்துதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 26வது ஜனாதிபதியாக தியோடர் ரூஸ்வெல்ட் (1901–1909) ஆவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மூத்தமகன் தியோடர் ஜுனியருக்கு உடல்நலமில்லை என்பதைக் கேள்விப்பட்டார். அவரது மகனுடைய நோய் சுகம் அடையக்கூடியதாக இருந்தாலும், டெட்டின் சுகவீனத்திற்காக கூறப்பட்ட காரணம் ரூஸ்வெல்ட்டை மிக அதிகம் பாதித்தது. அவரது மகனின் நோய்க்கு அவர்தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ரூஸ்வெல்ட் அவரது பெலவீனமான குழந்தைப் பருவத்தில் “சண்டை” வீரனாக வேண்டும் என்ற எண்ணம் அவரது வாழ்க்கையில் செயல்படாததால், அவரது மகன் சிறந்த சண்டை வீரனாக வேண்டுமென்று…

சிறந்த சாலைப் பயணம்

மடகாஸ்கரின் தேசிய சாலை எண் 5ல் செல்லும்பொழுது, அழகிய வெண்மணல் பரப்பிய கடற்கரை, தென்னந்தோப்புகள், இந்து மகாசமுத்திரம் என்ற பல அழகிய காட்சிகளைக் காணலாம். 125 மைல் நீளமுள்ள அந்த இருவழிச் சாலை பாறைகள், மணல், களிமண்ணால் நிறைந்து காணப்படும். உலகிலுள்ள மோசமான சாலைகளில் ஒன்றாக இந்த சாலையும் பெயர் பெற்றுள்ளது. பேரழுகு வாய்ந்த காட்சிகளைக் காண இந்த சாலை வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் நான்கு சக்கரங்களையும் தனித்தனியே இயக்கக் கூடிய சக்தி வாய்ந்த (Four Wheel Driver) வாகனத்தில் தான் செல்ல…

தேவனுக்குப் பெயரிடுதல்

கிறிஸ்டோபர் ரெட் எழுதிய ‘நான் புரிந்து கொள்ள இயலாத கடவுள்’ என்ற புத்தகத்தில், எதிர்பாராத நபர்தான் முதல்முதலாக தேவனுக்கு பெயர் சூட்டியுள்ளார். அதுதான் ஆகார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகாரின் கதை மனித வரலாற்றைப் பற்றி மிக உண்மையான பார்வையைத் தருகிறது. தேவன், ஆபிராம், சாராயிடம் அவர்களுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்று சொல்லி ஆண்டுகள் பல கடந்து விட்டன. சாராய் வயது முதிர்ந்தவளாகி பொறுமையை இழந்து விட்டாள். தேவனுக்கு “உதவி செய்யத்தக்கதாக”, அக்காலத்து வழக்கத்தின்படி மோசமான ஒரு காரியத்தைச் செய்தாள். அவளது அடிமைப் பெண்ணாகிய…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உங்கள் விசுவாசத்தை பகிருங்கள்

1701 ஆம் ஆண்டில், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்ப நற்செய்தி பிரச்சார சங்கத்தை நிறுவியது. அவர்கள் தேர்ந்தெடுத்த இலட்சிய வாா்த்தைகளாக ட்ரான்சியன்ஸ் அடியுவா நோஸ், லத்தீன் மொழியில் “வந்து எங்களுக்கு உதவுங்கள்!” இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை மிகவும் அவசியமான ஒரு உலகத்திற்கு எடுத்துச் செல்வதால், முதல் நூற்றாண்டிலிருந்து நற்செய்தி ஸ்தானாதிபதிகளின் அழைப்பு இதுவே.

“வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்ற சொற்றொடர், அப்போஸ்தலர் 16 இல் விவரிக்கப்பட்டுள்ள “மக்கெதோனியா அழைப்பிலிருந்து” வருகிறது. பவுலும் அவரது குழுவும் ஆசியா மைனரின் மேற்குக் கடற்கரையில் உள்ள துரோவாவுக்கு வந்தார்கள்(இன்றைய துருக்கி, வ.8). அங்கே, பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. (வ.9) அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, பவுலும் அவர் குழுவினரும் உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனார்கள் (வ. 10)அழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.

எல்லோரும் கடல்களைக் கடக்க அழைக்கப்படுவதில்லை, ஆனால் நமது ஜெபங்கள் மற்றும் நிதிகளால் அதை செய்பவர்களை நாம் ஆதரிக்கலாம். நாம் அனைவரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் நமது அறையிலோ, தெருவிலோ அல்லது சமூகத்திலோ யாரிடமாவது சொல்ல முடியும். நமது நல்ல தேவன் நாம் கடந்துபோய், எல்லாவற்றிலும் மேலான உதவியாகிய இயேசுவின் நாமத்தில் கிடைக்கும் மன்னிப்பின் வாய்ப்பை மக்களுக்கு வழங்கசெய்ய ஜெபிப்போம்.

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.